பாடல் 968
ஆடல்மத னம்பின் மங்கைய
- தலம்
- ஸ்ரீ புருஷமங்கை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தந்த தந்தனதானதன தந்த தந்தனதானதன தந்த தந்தனதனதான
பாடல் வரிகள்
ஆடல்மத னம்பின் மங்கையராலவிழி யின்பி றங்கொளியாரமத லமபு கொங்கையின்மயலாகி
ஆதிகுரு வின்ப தங்களைநீதியுட னன்பு டன்பணியாமல்மன நைந்து நொந்துடலழியாதே
வேடரென நின்ற ஐம்புலணாலுகர ணங்க ளின்தொழில்வேறுபட நின்று ணர்ந்தருள்பெறுமாறென்
வேடைகெட வந்து சிந்தனைமாயையற வென்று துன்றியவேதமுடி வின்ப ரம்பொருளருள்வாயே
தாடகையு ரங்க டிந்தொளிர்மாமுனிம கஞ்சி றந்தொருதாழ்வறந டந்து திண்சிலைமுறியாவொண்
ஜாநகித னங்க லந்தபின்ஊரில்மகு டங்க டந்தொருதாயர்வ சனஞ்சி றந்தவன்மருகோனே
சேடன்முடி யுங்க லங்கிடவாடைமுழு தும்ப ரந்தெழதேவர்கள்ம கிழ்ந்து பொங்கிடநடமாடுஞ்
சீர்மயில மஞ்சு துஞ்சியசோலைவளர் செம்பொ னுந்தியஸ்ரீபுருட மங்கை தங்கியபெருமாளே.
