Song 1
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
- Sthalam
- விநாயகர் துதி
- Raagam
- நாட்டை
- Thalam
- ஆதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தன தனதன தத்தன தனதனதத்தன தனதனதனதான
Lyrics
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுகன்அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவகற்பகம் எனவினைகடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்மற்பொரு திரள்புயமதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடுபணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதியமுதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்அச்சது பொடிசெய்தஅதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்அப்புன மதனிடைஇபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனைஅக்கண மணமருள்பெருமாளே.

